அதிக குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை அளிக்கும் என நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார்.

narve

நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் உள்ளிட ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பினும் கல்வி மற்றும் மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளாக இருந்து வருகிறது. இந்த நாடுகளில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம் குறைவானதை தொடர்ந்து நார்வே நட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நமது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இது நாட்டின் வருங்காலத்தை பாதிக்கும். இந்த பிரச்சனையை தீர்க்க மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக அரசு சலுகைகளை அளிக்க தயங்காது “ என குறிப்பிடப்பட்டுள்ளது.