Norway to kill 2,000 reindeer to eradicate disease

 

மான் இனத்துக்கிடையே பரவும் தொற்று நோயான ‘க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்’ அமெரிக்காவில் வெகுவாகப் பரவியிருந்தது. மான்களின் எச்சில் மூலம் அவற்றுக்குள் பரவக்கூடிய இந்நோய் தாக்கினால், கண்டிப்பாக மரணம் உறுதி. தற்போது, இந்த நோய் நார்வேயில் உள்ள காட்டு கலைமான்களிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின் நோர்ஜெல்லா மலைப்பகுதியில் திரியும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. 2,200 என்பது நார்வேயின் காட்டுக் கலைமான்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம். கடந்த ஆண்டின் இறுதியில் மூன்று கலைமான்களும், இரண்டு மூஸ் மான்களும் இந்த நோய்த் தாக்குதலால் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து, நார்வே அரசு மூன்று குழுக்களை அமைத்து நோயைத் தடுப்பது குறித்து ஆலோசித்தது. மூன்று குழுக்களுமே மேற்கண்ட ஆலோசனையை வழங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

 

”இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்படும் என்று தெரிந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. தற்போது அழிக்க இருக்கும் கலைமான்களின் எண்ணிக்கையைவிட அதிக கலைமான்களை விரைவில் உருவாக்கும் திட்டங்களும் எங்களிடம் உள்ளது”  என்று அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர், ஜோன் ஜார்ஜ் டேல் குறிப்பிட்டுள்ளார்.