மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – நார்வேயின் கார்ல்சன் முன்னிலை!

புதுடெல்லி: உலகளவிலான சாம்பியன்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ செஸ் தொடரில், உலகச் சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் உள்ளார்.

மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்டம் வெல்வோருக்கு ரூ.7.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

இத்தொடரின் அரையிறுதியில் சீனாவின் டிங் லிரென் உடன் மோதினார் நார்வேயின் கார்ல்சன். விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர் டிராவில் முடிவடைந்தது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், 3.5-2.5 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார் மாக்னஸ் கார்ல்சன். மற்றொரு அரையிறுதி நெதர்லாந்து – ரஷ்ய வீரர்களுக்கு இடையே நடைபெறுகிறது.