சென்னை:

டிடிவிக்கு ஆதரவாகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டதாக விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் உள்பட 4 பேருக்கு அதிமுக கொறடா உத்தரவின்பேரில் சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், தான் அரசுக்கு எதிராக செயல்படவில்லை என்றும், தான் எப்போதும் அதிமுக விசுவாசி, அரசுக்கு ஆதரவாகவே இருப்பேன்  விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறி உள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம் அன்சாரி கட்சி விரோதமாக செயல்படுவதாக, அதிமுக கொறடா மற்றும் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து,  வீடியோ ஆதாரங்களுடன்  புகார் மனு அளித்துள்ளனர்.

மனுவில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ள, அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அரசு கொறடா ராஜேந்திரன் அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக, மூன்று பேர் மீது, சபாநாயகர் தனபாலிடம், வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்திருப்பதாக, தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் விளக்கம் கேட்டு சபநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில், தான் அரசுக்கு எதிராக செயல்படவில்லை என்றும், தான் எப்போதும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவே இருப்பேன் என்றும்  விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறி உள்ளார்.