அனுமதி மறுப்பு: டிஎம்எஸ் நுழைவாயிலில் செய்தியாளர்கள் தர்ணா!

சென்னை,

டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காததால்,  பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக செவிலியர்கள் போராட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

அவர்களை சந்திக்க அவர்களது உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்க மறுத்துவரும் அரசு, கடந்த 3 நாட்களாக செய்தியாளர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை சந்திக்க மறுத்து வருகிறது.

இன்றும் போராடும் செவிலியர்களை சந்திக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்ததால், பத்திரிகையாளர்கள் டிஎம்எஸ் நுழைவு வாயிலில் தரையில்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்