ஹர்த்திக்குடன் போட்டியில்லை, இந்திய அணி வெற்றிக்கு இணைந்து பங்காற்றுவோம்: கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்

புதுடெல்லி:

ஹர்திக் பாண்ட்யாவுடன் போட்டி ஏதும் இல்லை. இருவரும் இந்திய அணியின் வெற்றியையே விரும்புகிறோம் என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்துடன் இந்தியா விளையாடிய போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சேகர் சிறப்பாக விளையாடினார்.

4-வது நபராக களம் இறங்கும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, நான் ஹர்திக்கில் போட்டியாளர் என்று நினைக்கவில்லை. நாங்கள் இருவரும் ஆல்ரவுண்டர்கள். எனினும் இருவரும் மாறுபட்டவர்கள்.

இப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி போட்டியாளர்களாக முடியும்.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு எங்கள் இருவரது பங்களிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.