சென்னை:

நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சித்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும்,   மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் (கவுன்சிலர்களே மேயரை, தலைவரை தேர்வு செய்வது) நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள், மேயர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை ஏதும் நடத்தப்பட வில்லை என்று மறுப்பு தெரிவித்தவர்,  அதிமுகவின் அடித்தளம் பலமாக இருப்பதால் ரஜினியுடன், கமல் இணைவதால் தங்கள் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று குறிப்பிட்டார்.