சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 (11ம் வகுப்பு) பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், +1 பொதுத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் மத்தியில் புகார் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், கருணை மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.

“குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், . அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து,  முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும், தமிழகத்திர்ல,  மாணவர்கள்  அகில இந்திய அளவில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும்  வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை  மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.