Random image

‘முஸ்லிம்களையும் உள்ளடக்கியதே இந்துத்துவம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

டில்லி:

ந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியதுதான் என்று  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு  தலைநகர் டில்லியில் நடைபெற்று  வருகிறது. நேற்றைய 2-வது நாள் கூட்டத்தில் பேசிய  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது,

‘இந்து ராஷ்டிரா என்றால் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்று அர்த்தம் கிடையாது.  ஒருவேளை, நாம் இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அதற்குப் பெயர் இந்துத்துவம் இல்லை. இந்துத்துவம் என்பது இஸ்லாமியர்களை உள்ளடக்கியது. நாங்கள் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது இந்துத்துவா அல்ல, இந்துத்துவமானது இந்தியாவுக்கும், பாகுபாடுக்கும் உரியது”  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகளாவிய சகோதரத்துவம் குறித்து பேசுகிறது என்று கூறினார்.

இந்த சகோதரத்துவம், பன்மையில் ஒற்றுமை திகழ உதவுகிறது. இதுதான் இந்துத்துவத்தின் பண்பாடு. அதனால்தான், நாங்கள் இந்து ராஷ்டிரா என்று குறிப்பிடுகிறோம். இந்த அமைப்பின் நோக்கம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒண்றினைப்பது.

இந்தச் சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அரசியலில் இருந்து விலகியே உள்ளது. இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை. தேர்தல் அரசியலில் பங்கேற்றதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை’ என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் முஸ்லீம் சகோதரத்துவர்தை குறிப்பிட்டு பேசிய  பகவத், ஆர்.எஸ்.எஸ். “உலக சகோதரத்துவத்தையும், பன்முகத்தன்மையிலும் ஒற்றுமையைக் குறிக்கின்றன, இது இந்துத்துவத்தின் மரபாகும், அதனால்தான் நாம் அதை ஒரு இந்து ராஷ்டிரம்  என்று அழைக்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

சங்கத்தின் நோக்கம் முழு சமுதாயத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், “சங்கத்தின் பிறப்பு முதல், அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளது.இது தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேர்தல் அரசியலில் பங்கேற்கவோ கூடாது.” ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அரசியல் கட்சியின் பதவி வகிக்க முடியாது.

முதல்நாள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத் காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.  “காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெரிய பாத்திரத்தை வகித்தது, இந்தியாவை பல பெரும் பிரமுகர்களிடம் கொடுத்தது, அவர்களில் சிலர் இன்னமும் எங்கள் வழிகாட்டி சக்தியாக உள்ளனர்,” என்று அவர் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல,  மக்களிடையேயும், அரசியல்கட்சிகளிடையேயும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இயக்குகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான நம்பிக்கை யாகும். நாங்கள் ஒருபோதும் அரசின் கொள்கைகளில் தலையிட விரும்பியதில்லை, தலையிடு வதும் இல்லை. இன்று அரசில், அரசியலில் உள்ள பல்வேறு தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சேவகர்கள்தான். அதில் பிரதமர்களும் இருக்கிறார்கள், குடியரசுத் தலைவரும் இருக்கிறார்கள். அவ்வப்போது எங்களிடம் சில குழப்பமான நேரங்களில் தார்மீக ஆலோசனை கேட்பார்கள் எங்களால் முடிந்தால் கூறுகிறோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அரசியலில் களமிறங்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற ஆசை இல்லை. எந்த தேர்தலிலும் போட்டியிடவும் விருப்பமில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.