மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பின்கதவு வழியாக வந்து ஆட்சியை பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சிவசேனா தலைவர் பால்தாக்கரே தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு எம்எல்ஏவாக இல்லாத தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார். ஆனால், அவர் 6 மாதத்திற்குள் எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

மே 28 க்குள் ஆறு மாதங்கள் பதவியில் நிறைவடையும் போது உறுப்பினராக வேண்டும். இல்லை யெனில், அவர் முதல்வர் பதவி பறிபோய்விடும். இதனால், அவரை எம்எல்சியாக நியமிக்க  கடந்த 9ம் தேதியன்று துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச் சரவை கூட்டத்தில், எம்.எல்.சி. உறுப்பினர்கள் நியமனத்தில் கவர்னருக்கான 2 ஒதுக்கீட்டில் ஒன்றை உத்தவ் தாக்கரேவை நியமிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்து, அதற்கான பரிந்துரை அனுப்பப்பட்டது.

ஆனால், கவர்னர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக நியமனம் செய்வது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் கவர்னர் கோஷ்யாரி கருத்து கேட்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரு, மகாராஷ்டிரா சட்டசபை  எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக ஆர்வம் காட்ட வில்லை என்று கூறியவர்,  பின்வழியாக  ஆட்சியை பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

“சட்டம்  மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு இணங்க ஆளுநர் பொருத்தமான முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம், அதன்படி உத்தவ் தாக்கரேவை சபைக்கு பரிந்துரைக் கிறோம்” என்றும்  கூறிய பட்நாவிஸ்,  மாநிலத்தில் உறுதியற்ற தன்மையை  பாஜக விரும்பாததால், தாக்கரே சபைக்கு பரிந்துரைக்கப்படுவதையும் முதல்வராக தொடர்ந்து வருவதையும் பாஜக மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.