டில்லி:

சினிமா துறையில் மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் பாலியல் தொந்தரவு உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் பிரபல பெண் நடன அமைப்பாளராக உள்ள சரோஜ் கான் கூறுகையில், ‘‘ சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் உறவு கொள்வது சாதாரணமாக நடக்கிறது. பெண்கள் சமதத்துடன் நடக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாலும் அவர்கள் கைவிடப்படவில்லை. அவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தனது கருத்தை வாபஸ் பெற்றார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறுகையில், ‘‘பாலியல் துன்புறுத்தல் சினிமா துறையில் மட்டுமே இருப்பதாக கூறமுடியாது. நாடாளுமன்றம் உள்ளிட்ட பிற இடங்களிலும் இது பரவலாக நடக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. கசப்பான உண்மை தான். இந்த கொடுமைக்கு எதிராக இந்தியா துணிந்து நிற்க வேண்டும். பாதித்த விபரங்களை பெண்கள் துணிச்சலுடன் தெரிவிக்க வேண்டும்’’என்றார்.