திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் மணமகன்!

மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு மணமகன் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அளித்து வருகிறார். மோடிக்கு வாக்களிப்பது தான் தனது திருமண பரிசு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Modi

ஹைதரபாதில் உல்ள சம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் ராவ். இவரின் 4வது மகன் முகேஷிற்கு இம்மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமணத்திற்கு முகேஷ் அடித்துள்ள அழைப்பிதழ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, திருமண அழைப்பிதழில் மணமகன், மணமகள் பெயர்கள், திருமண நேரம், தேதி உள்ளிட்டவைகள் இடம்பெறுவது வழக்கம்.

இது மட்டுமில்லாது அழைப்பிதழில் கீழே ‘ வரப்போகும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதை எனது திருமண பரிசாக கருதுகிறேன்’ என அச்சிட்டு உள்ளார். இது குறித்து பேசிய முகேஷ் “நரேந்திர மோடியின் கொள்கையால் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அவரது தீவிர தொண்டன். அவரின் ஆட்சியில் தான் நாட்டில் ஊழல் இல்லை. நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இதனால் எனது திருமண அழைப்பிதழில் மோடிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டேன் “ என கூறினார்.

You may have missed