மகாராஷ்டிரா:
கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே  தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை ஒத்தி வைக்கக் கோரி மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே இந்த கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் JEE மற்றும் CET தேர்வுகளை நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது ஆனால் கொரோனா தொற்றை காரணம் காட்டி ஆதித்யா தாக்கரே தேர்வுகளை நடத்த கூடாது என்று எதிர்த்து வருகிறார். ஆதித்யா தாக்கரேவை தலைமையாகக் கொண்ட சிவசேனாவின் இளைஞரணி இதற்கு முன்னதாகவே தேர்வுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள தன்னுடைய கடிதத்தில் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த கடினமான காலகட்டத்தில் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது என்றும், பல பகுதிகளில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும், கொரோனா தொற்ற வேகமாக பரவி வரும் பெரும்பாலான மாவட்டங்களில் சிவப்பு மண்டலங்கள் தற்போது அதிகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முழு கல்வி ஆண்டையும் ஒத்தி வைக்கவும் ஆதித்யா தாக்கரே வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு மாணவரும் கல்வியாண்ட இழக்காத படி ஜூன்-ஜூலை 2020க்கு பதிலாக 2021 ஜனவரியில்  கல்வி ஆண்டை தொடங்குவது குறித்தும் நாம் சிந்திக்கலாம் என்றும் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்