சென்னை:

40ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்கும் அத்திவரதர் 48 நாட்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் தண்ணீருக்குள்  வைக்கக் கூடாது  என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்  போர்க்கொடி தூக்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் வரதராஜர் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு ஆகம பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை  48 நாட்கள் காட்சி அளிக்கும் அவர் 24 நாட்கள் அனந்த சயன கோலதச்திலும், மீதமுள்ல 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார்.

தற்போது சயன கோலத்தில் தினசரிவண்ண வண்ணப்பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு,  கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். அவரைக் காண லட்சக்கணக்கானோர் தினசரி காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்தை சேர்ந்த் சடகோப ராமானுஜ ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஜீயர், கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் வைத்திருந்தனர். தற்போது அது தேவையில்லை என்பதால், அவரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கக்கூடாது. இதுகுறித்து, முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை புகழ் ஜீயரின் தற்போதைய கருத்தும் மீண்டம்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.