‘ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை’: சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு பதிலடி

--

டெல்லி:

சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கவாஸ்கர் ஆடுகளத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறார் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற லால்பகதூர் சாஸ்திரியின் 26வது  நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  சுனில் கவாஸ்கர், மாணவர்களின் சிஏஏக்கு எதிரான போராட்டம் குறித்து விமர்சித்தார்.

தற்போது, நாடு கொந்தளிப்பான சூழலில் உள்ளது, நம் மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பதற்குப் பதிலாக தெருவில் இறங்கியுள்ளனர். தெருக்களில் இறங்கியதற்காக இவர்களில் பலர் தற்போது மருத்துவமனையில் இருந்து வருகின்றனர் என்றும், நாம் ஒரு தேசமாக உச்சத்தை எட்ட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம். நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்பதை மறந்து விடக்கூடாது.

கிரிக்கெட் இதைத்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. நாங்கள் அனைவரும் ஒன்று சேரும் போது வெற்றிகளைப் பெற்றோம். கடந்த காலத்திலும் இந்தியா பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. தற்போதைய நெருக்கடிகளிலிருந்தும் நம் நாடு மீண்டு வலுவான தேசமாகும். நாம் ஒரு தேசமாக ஒற்றுமையுடன் இருந்தோமானால் உயரத்தை எட்ட முடியும் என்று பேசினார்.

கவாஸ்கரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவாஸ்கர் முதுகெலும்பு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,  கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்று  நான் கருதுகிறேன். காலத்தால் அழியாத அவர், சிறப்பான கிரிக்கெட்  ஆட்டத்திற்கு தேவையான  ஆடுகளத்தை பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை, மேலும் பந்தை பறப்பதை தவறாக கருதுகிறார். மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் முற்றிலும் முறையானவை, தேவை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்து பத்திரிகையின் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கவாஸ்கர் முதுகெலும்பு இல்லாதவர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் என்று  விமர்சித்து உள்ளார்.

மற்றொருவர், “நாடு கொந்தளிப்பில் உள்ளது” என்ற கவாஸ்கரின் பேச்சு  புத்திசாலித்தனமானது என்றும், 1948 முதல் 48,786 கலவரங்கள் நடந்தபோது அவர் அதை ஒருபோதும் உணரவில்லை. அவர் புத்திசாலித்தனமாக (தாராளவாதிகளை மகிழ்விக்க) சமநிலைப்படுத்தினார், அவர்களில் சிலர் வீதிகளில் இருப்பதற்காக மருத்துவமனையில் முடிவடைகிறார்கள் என்று விமர்சித்து உள்ளார்.

இன்னாருவர்,  , “மாணவர்கள் வகுப்பறைகளில் இருக்க வேண்டும் மற்றும் இந்தியாவை முன்னேற்றுவதற்கு தொழில் வாழ்க்கையை உருவாக்க வேண்டும்” என்று கவாஸ்கர் கூறுகிறார், ஆனால், இந்திய  அரசியலமைப்பு விழுமியங்கள் அரிக்கப்பட்டால்  ‘இந்தியா தனித்து  விடப்படும்’? இவர்கள் அரசாங்கத்தின் ஊதுகுழல்கள் என்று தெரிவித்துஉள்ளார்.

மற்றும் பலர் சமூக வலைதளங்களில் கவாஸ்கரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.