இந்திக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்! வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் ப.சி., ஸ்டாலின், வைகோ அழைப்பு

--

சென்னை:

இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் அமைச்ச்ர ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்தனர்.

ந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியஅரசுக்கு எதிராக போராட வேண்டும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேசினார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங்கில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவர் ஸ்டாலின் நூலை வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

சிதம்பரம் வாழ்த்து:

அதைத்தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ப.சிதம்பரம்,  வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வரலாற்றில் நாகரிகத்தின் அடையாளம். சிலர் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கி றார்கள், ஆனால் தமிழில் பேசுவதும், எழுதுவதும் இல்லை, இது தமிழ் மொழிக்கு அழிவை தரும் என்றார். 24 ஆளுமைகளுக்குப் பிறகு தெரிந்தும் தெரியாமலும், இருந்தும் இல்லாமலும், மறைந்தும் மறையாமலும் இருக்கின்ற 25 ஆவது ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து எனப் புகழ்ந்தார்.

“இந்தி அல்லாத மொழிகளை தற்போதுஒரு பெரிய ஆபத்து சூழ்ந்து  உள்ளது. எனவே, இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த போராட்டத்தை வழி நடத்த நாங்கள் தகுதியானவர்கள். முதல் கட்டமாக, மொழியும் தமிழ் ‘இனமும்’ வேறுபட்டவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வாழ்க  என்று சொன்னால் போதாது, ஆனால் தமிழ் செழிக்க எல்லாவற்றையும் செய்யுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

வைரமுத்துவின் நூல் குறித்து வாழ்த்துரை வழங்கிய ஸ்டாலின்,  வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை தமிழர்களுக்கான மிகப்பெரிய ஆயுதம் என்று தெரிவித்தார். மேலும்,
கலைஞரின் நினைவின்றி வைரமுத்துவால் இருக்க முடியாது என்றவர், அவர்  எத்தனை உயரத்திற்கு போனாலும் கலைஞர்தான் தன்னுடைய தமிழ் ஆசான் என்று கூறுவார்.

அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலைஞர் கையில்தான் தன்னுடைய புத்தகம் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் வைரமுத்து என்றும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன்னுடைய கருத்துக்களில் உறுதியாக இருப்பவர் கவிஞர் என்று புகழ்ந்த ஸ்டாலின்,  தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடந்து வருகிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளி வந்துள்ளது என்று கூறினார்.

தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர் வைரமுத்து, திரைத்துறையில் அவரை விட அதிக விருது பெற்றவர் யாரும் இல்லை –  வடமொழி ஆதிக்கத்தை புகுத்த நினைக்கும் இந்த நிலையில், வைரமுத்து தமிழாற்றுப்படை நூலை தந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.

வைகோ. வாழ்த்து:

விழாவில் பேசிய வைகோ,  மூவாயிரம் ஆண்டுகள் தமிழ் மொழி சிறப்புற்றிருக்க காரணமாக இருந்த சான்றோர்களை பட்டிலிட்டு தொகுத்துள்ளார் வைரமுத்து. மிகச் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது, நமது மொழி பல எதிர்ப்புக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இந்தப் போரில் நமக்கு ஆயுதமாக தமிழாற்றுப்படை இருக்கும் என்று கூறினார்.

இந்தத் தமிழாற்றுப்படை நூல் முறையாக ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு.  3000 ஆண்டுக்கால தமிழ் ஆளுமைகளை ஆற்றுப்படுத்தி ஒரு நூலாக தந்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து எனக் கூறினார்.

You may have missed