ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு இல்லை! ரஜினிகாந்த் டுவிட்!

சென்னை,

டைபெற இருக்கும்  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியான  ஆர்கே நகர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.

இந்நிலையில், பாரதியஜனதா வேட்பாளரான கங்கைஅமரன், ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதன் காரணமாக, ரஜினியின் ஆதரவு பாரதியஜனதா கட்சிக்கு என பரபரப்பு நிலவியது.

இதன் காரணமாக, ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவரது ஆதரவு கிடைக்கும் என்று நம்பியிருந்த பாரதியஜனதா கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.