புதுடெல்லி:

இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக் குழுவின் நோக்கமல்ல என அதன் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியுள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில்  தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த வியாழனன்று வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.  அதில்,மும்மொழிக் கொள்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தோர், ஏதாவது ஒரு மொழியை பயில வேண்டும், இந்தி பேசாதா மாநிலங்களைச் சேர்ந்தோர் 6-ம் வகுப்பு முதல் இந்தி கற்கவேண்டும் என்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தி மொழி திணிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில், தேசிய கல்வி கொள்கைக் குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கள் அளித்த பேட்டியில், இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணம் குழுவுக்கு கிடையாது. அந்த பிரிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

மும்மொழிக் கொள்கையில், மூன்றாவது மொழியை கற்கும் முடிவை அந்தந்த மாநிலங்களே எடுத்துக் கொள்ளலாம். இந்த கொள்கையை வகுப்பதில் அரசியல் அழுத்தம் ஏதும் இல்லை.

அடுத்த 30 ஆண்டுகள் வரை செயல்படுத்தக் கூடிய கல்விக் கொள்கையை தயாரிக்க அரசு எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது என்றார்.