பணம் சம்பாதிக்க இது நேரமல்ல… தனியார் மருத்துவமனைகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

குஜராத்:
ணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைக்கு குஜராத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் மாநில அரசுகள், அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், அகமதாபாத் நகரம் மற்றும் புறநகரில் அமைந்துள்ள மருத்துவமனைகளின் கட்டணக் கட்டமைப்பை சரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

“எந்தவொரு நிலையிலும், நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூல் செய்யக் அனுமதிக்க கூடாது. மருத்துவ சேவைகள் மிகவும் அத்தியாவசியமான சேவைகளாகும், தற்போதுள்ளதைப் போன்ற சமயங்களில், தனியார் மருத்துவமனைகள் நோயாளியிடமிருந்து அதிக கட்டணத்தை கேட்க முடியாது என்றும் குஜராத் உயர் நீதிமன்ற பெஞ்ச் தெரிவித்துள்ளது.

” சில தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளித்துள்ளது. இதை பயன்படுத்தி அந்த மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, குஜராத் உயர் நீதிமன்ற பெஞ்ச் இதை தெரிவித்துள்ளது.

அகமதாபாத் மற்றும் சர்தார் படேல் வல்லபாய் படேல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, கொரோனா நோயாளி தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.