“கத்தி சண்டை”யில் தமன்னா

விஷால்,தமன்னா நடித்துள்ள ’கத்திச் சண்டை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் சுராஜிடம், தெலைக்காட்சி பேட்டி ஒன்றில், “கத்திச் சண்டை படத்தில் ஏன் தமன்னா அதிக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்?” என்று கேட்கப்பட்டது.
சுராஜ்

இதற்கு பதிலளித்த இயக்குநர் சுராஜ், ”நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் முழுவதும் போர்த்திக் கொண்டு நடிக்க விட முடியுமா? என் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர, ஹீரோயினுக்கு முட்டிக்கு கீழ் உடையை வடிவமைத்தால் அதை நான் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். இது பற்றி ஹீரோயின் சங்கடப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.
ஏனென்றால் கீழ்த்தட்டு ரசிகர்கள் அதிக பணம் செலவளித்து படம் பார்க்க வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஹீரோயின்கள் கவர்ச்சியாக உடையணிய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.  ஆகவே அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில்தான் என் படத்தில் நடிகைகளை கவர்ச்சியாக காட்டுகிறேன்” என கூறினார்.
மேலும், “ஹீரோயின்கள் தங்கள் நடிப்புத் திறமையை டிவி சீரியல்களில் காட்டிக் கொள்ளட்டும். கமர்சியல் படம் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக ஹீரோயின்கள் இது போன்ற கவர்ச்சி உடை அணிந்துதான் நடிக்க வேண்டும்.” என்றும் சுராஜ் தெரிவித்தார்.
சுராஜின் கருத்துக்கள் திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் ஒரு சேர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
“ஆபாசம், கவர்ச்சி இல்லாத எத்தனையோ நல்ல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. கவர்ச்சியை மூலதனமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பல வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் முடங்கியிருக்கின்றன. ஆகவே ரசிகர்கள் முட்டாள்கள் அல்ல.
நல்ல படங்கள் எடுக்கத்தெரியாவிட்டால், “தெரியாது” என்று சொல்லிவிட்டுப்போகட்டும். அதைவிட்டுவிட்டு நடிகைகளையும், ரசிகர்களையும் அவமானப்படுத்துவதா” என்று சுராஜூக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.