செல்லாது அறிவிப்பு: மோடியின் மிகப்பெரிய தோல்வி! கெஜ்ரிவால்

டில்லி,

ரூபாய் செல்லாது என்று அறிவித்தது  மோடியின் மிகப்பெரிய தோல்வி என்று டில்லி முதல்வர்  கெஜ்ரிவால் கூறினார்.

கடந்த மாதம் 8ந்தேதி பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்தார். ஒரு மாதம் கடந்தும், மக்கள் பணத்திற்காக வங்கி வாசலில் காத்திருக்கும் நிலமையே உள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர்,  அரவிந்த் கெஜ்ரிவால்  கூறியதாவது:-

ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததில் எந்த பலனும் இல்லை. இதுவரை ஒரு பைசா கூட கருப்பு பணம் வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பணப்பிரச்சினைக்கு, 50 நாட்கள் பொருத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் 1 மாதம் முடிந்துவிட்டது. இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மோடிக்கு  மிகப்பெரிய தோல்வியாகும். இதில் ஊழல் தான் நடந்துள்ளது. ரூபாய் நோட்டு மாற்றிய பணம் வராக்கடனுக்குதான் போய் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.