கமதாபாத்

நோட்டா” எனப்படும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காத நிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியை விட அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் எந்தக் கட்சி வேட்பாளர்களையும் விரும்பாத வேட்பாளர்கள் வாக்களிக்க நோட்டா (NOTA – None of the above) என்னும் ஒரு பட்டன் அமைக்கப்படுகிறது.   முதலில் ஏதோ சிலர் இதை தேர்ந்தெடுத்த நிலையில் தற்போது அதிகம் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சோம்நாத்,  நாராயன்புரா, காந்திதாம் போன்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளை விட மொத்தம் 1.9% அதிகம் பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.    போர்பந்தர் தொகுதியில் பாஜகவின் பாபுபாய் பொகாரியா 1855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில்  அந்த தொகுதியில் 3433 பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.