சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு நோட்டாவை குறை கூற வேண்டாம் : ஆங்கில பத்திரிகை

டில்லி

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கும் நோட்டாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஒரு ஆங்கிலப் பத்திரிகை சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

நோட்டா குறித்து ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை  வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கம் பின் வருமாறு :

நோடா என்பது போட்டியிடும் தேர்தலில் போட்டிய்டும் எந்த வேட்பாளரையும் பிடிககதவர்கள் தேர்வு செய்வதாகும். நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி மற்றும் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்களில் மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் அதிக அளவில் நோட்டாவுக்கு வாக்குகள் கிடைத்திருந்தன.

இதை ஒட்டி பாஜகவினர் தங்களின் வெற்றிக்கு நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததே காரணம் என கூறுகின்றனர். இதே நிலையில் காங்கிரஸ் இருந்தாலும் அந்த கட்சியும் நோட்டாவை குறை கூறி இருக்கும் என்பதே உண்மையாகும். ஒரு சில நேரங்களில் வாக்காளர்களும் பொதுமக்களும் நோட்டாவால் வேட்பாளர்கள் தோல்வி அடைவதோ வெற்றி பெறுவதோ நிகழ்வதாக நம்பி வருகின்றனர்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 1% – 1.4% வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்ஹ்டுள்ளனர். அதே போல 1.3% ராஜஸ்தானிலும், 1% சத்தீஸ்கரிலும், 0.4% மிஜோரம் மாநிலத்திலும் நோட்டாவுக்கு வக்குகள் கிடைத்துள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடெங்கும் மொத்தமாக 1% வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

ஆனால் சென்ற 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த 1% வாக்காளர்களால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும் என்பது தவறான கணக்காகும்.
மேலும் பல முறை பாஜக நோட்டா என்பது தங்களை மட்டும் எதிர்த்து அளிக்கப்படும் வாக்குகள் அல்ல எனவும் அனைத்து கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளும் அதில் உள்ளன என கூறி வ்ருகிறது. குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நோட்டாவுக்கும் பாஜகவுக்கும் இடையில் போட்டி என நெட்டிசன்கள் பதியும் போது பல பாஜகவினர் இந்த கருத்தை கூறி உள்ளனர். எனவே நோட்டாவால் வெற்றி தோல்வியை முடிவு செய்ய இயலாது என்பதே உண்மையாகும்.