நோட்டா: அரசியலை வெறுக்கிறார் இந்த விஜய்!

டிகர் விஜய் அரசியல் மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி  வருகிறார். ஆனால் இன்னொரு நடிகரான விஜய்.. அதாவது விஜய் தேவரகொண்டா,  அரசியலை வெறுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த விஜய் தேவரகொண்டா?

பிரபல தெலுங்கு நடிகர். ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற அதிரடி தெலுங்குப் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

தற்போது நோட்டா படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் உருவாகியிருக்கு இந்தப் படம் இன்று உலகம் முழுதும் வெளியாகிறது.

சரி, அரசியலை வெறுக்கிறாரா இவர்?

ஆமாம்.. அப்படித்தான் சமீபத்தில் சொல்லியிருந்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில்  , “நான் அரசியலை வெறுக்கிறேன். ஆனால், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால், இப்படிதான் செய்வேன்.”  என்று பதிவிட்டார்.

எப்படிச் செய்வாராம்?

அதைத்தான் இன்று வெளியாகும் நோட்டா படத்தில் சொல்லியிருக்கிறாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படம் நோட்டா.

விஜய் தேவரகொண்டா

இதில் முக்கிய வேடத்தில் சத்யராஜ், நாசர், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்க, ‘நோட்டா’. ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். இவர்  ஏற்கெனவே ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கியவர்.

“அரசியல் அதிரடி திரைப்படம் இது. மக்கள் என்ன செய்தால் அரசியல்வாதிகள் சரியானவர்களாக இருப்பார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறோம்” என்று ஆர்வத்தை அதிகப்படுத்துகிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.