டில்லி:

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறவுள்ளது. வங்கிக்கு திரும்பி வந்த ரூ. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை சரிபார்க்கும் பணி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு மனுவுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ‘‘ 5.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 134 கோடி எண்ணிக்கையிலான ரூ. 500 நோட்டுக்கள், ரூ.5.24 லட்சம் கோடி மதிப்பிலான 524.90 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை சரிபார்க்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.10.91 லட்சம் கே £டியாகும். முழு பணத்தையும் சரிபார்க்கும் பணி 2 ஷிப்ட்களில் கைவசம் உள்ள 66 நோட்டு எண்ணும் எ ந்திரம் மூலம் நடந்த வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு தோல்வியை சந்தித்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பணமதிப்பிழப்பு அறிவி க்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை கறுப்பு பண எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் இருந்த ரூ.15.28 லட்சம் கோடி மதிப்பிலான 99 சதவீத ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டது என்று அறிவித்தது.