பன்மொழி நடிகர் கிரிஷ் கர்னாட் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்…!

பன்மொழி நடிகர் மற்றும் நாடக ஆசிரியரான கிரிஷ் கர்னாட் இன்று காலை திங்கட்கிழமை, ஜூன் 10, பெங்களூரில் லாவெல்ல சாலையில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 81 .

மகாராஷ்டிர மாநிலத்தில் மாத்தேரான் என்ற இடத்தில் 1938 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி பிறந்தவர் கிரிஷ் கர்னாட். அவரது தாயார் ஒரு இளம் விதவையாக இருந்தவர். இவர் தந்தை டாக்டர் ரகுநாத் கர்னாட் ஆவார் . கிரிஷ் கர்னாட் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர்.

பல தசாப்தங்களாக பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை நாடகங்களை உருவாக்கியவர இவர் . பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bangalore, cinema, Girish Karnad, Kannada, passed
-=-