பணமதிப்பிழப்புக்கு பின் 85% பணம் புழக்கத்திற்கு வந்துவிட்டது!! மத்திய அரசு

டில்லி:

பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த பண புழக்கத்தில் 85 சதவீதத்திற்கு மேல் தற்போது ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வரை 17 ஆயிரத்து 540 பில்லியன் மதிப்பிலான ரொக்கம் புழக்கத்ததில் இருந்தது.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் கடந்த மாதம் 23ம் தேதி வரை ரூ. 15 ஆயிரத்து 74.43 பில்லியன் மதிப்பிலான ரொக்கம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வான் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘நாட்டின் பல தரப்பட்ட பகுதிகளில் பண புழக்கம் பரவலாக இருக்கும் வகையில் கண்காணிக்கப்படுகிறது. முந்தைய மதிப்பு பண புழக்கத்தை மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

‘‘தொடர் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பண புழக்கத்தின் அளவு அதிகரிக்கப்பட்டு முந்தைய 85 சதவீதத்துக்கு மேலான அளவை எட்டியுள்ளோம்’’ என்றார்.