கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய வெனிஸ் நகரம்

வெனிஸ்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீர் பாய்ந்து வரும் வெனிஸ் கால்வாயில், முதல் முறையாக அந்த நீரில் உள்ள மீன் தெரிவது தெளிவாக தெரிகிறது.

கொரானா வைரசால் தனிமைபடுத்தப்பட்டுள்ள வெனிஸ் நகர வீதிகள், கால்வாய்களில் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொரானாவால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள இத்தாலியில், தலைநகர் ரோம், லோம்பர்டி, வெனிஸ் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

பார்கள், ரெஸ்டாரண்டுகள், கடைகள் மூடப்பட்டுள்ளதால், வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனிடையே ரோமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள், தங்கள் வீடுகளின் பால்கனிகளில் நின்று, அந்நாட்டு தேசிய கீதம் உட்பட பாடல்களை பாடி வருகின்றனர்.