கருப்பன்  : விஜய் சேதுபதி , பட தயாரிப்பாளர் மீது வழக்கு

 

சென்னை

ருப்பன் என்னும் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம், இயக்குனர் பன்னீர் ஆகியோர் மீது ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் எம் காத்தான் மானநஷ்ட வழக்கு.

கருப்பன் என்னும் தமிழ் படத்தை இயக்குனர் பன்னீர்  இயக்கத்தில் ஏ. எம் ரத்னம் தயாரிக்கிறார்.   இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.   இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.  அதில் விஜய் சேதுபதி ஒரு காளையை அடக்குவது போல சித்தரிக்கப் பட்டுள்ளது.

அது கிராஃபிக்ஸ் முறையில் தயாரானது எனக் கூறப்படுகிறது.   அந்த புகைப்படம் வைரலாக பரவியது.  விஜய் சேதுபதியின் ரசிகர்கள், அவர் முழு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி விட்டதாக புகைப்படத்துடன் பதிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் எம். காத்தான் என்னும் திருச்சி வாசி, தான் வளர்க்கும் கொம்பன் என்னும் ஜல்லிக்கட்டு காளைக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் இந்த கிராஃபிக்ஸ் புகைப்படம் வெளிவந்துள்ளது என்றும், அந்தப் புகைப்படத்தை இணையத்தில் இருந்து நீக்குவதோடு, தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விஜய் சேதுபதி, ஏ. எம். ரத்னம்,  பன்னீர் ஆகிய மூவருக்கும் வக்கில் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்..