சென்னை

ந்த ஆண்டு மதுபான விற்பனை குறைந்துள்ளதற்கு காரணம் அளிக்குமாறு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு அரசு நோட்டிஸ் அனுபி உள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதி வருவதை அனைத்து மக்களும் தினசரி பார்த்து வருகிறார்கள்.   இருப்பினும் சென்ற 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டில் இதுவரை மது விற்பனை குறைந்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.  இதற்கு என்ன காரணம் என அரசு ஆராய்ந்து வருகிறது.   தமிழக அரசு மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால் மதுபான விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  இது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர்  டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு நோட்டிஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “சென்னை பெரியமேட்டில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்துக்கு இன்று (மே மாதம் 22ஆம் தேதி) அனைத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களும் நேரில் வர வேண்டும்.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்ததற்கான காரணத்தை விளக்கி அறிக்கை அளிக்க வேண்டும்.  அத்துடன் சாலை ஓர மதுக்கடைகள் மூடியதால் ஏற்பட்ட விற்பனை சரிவு குறித்தும் விளக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது