வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

டில்லி

க்களவை தேர்தலை முன்னிட்டு வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குபதிவு நேற்று முன் தினம் 91 தொகுதிகளில் நடைபெற்றது. அதை ஒட்டி வாட்ஸ்அப் தளத்தில் ஒரு செய்தி வெளியாகியது. அது பலராலும் பரப்ப பட்டது. இதனால் நாட்டில் பல குழப்பங்கள் உண்டாகின. அந்த செய்தி போலிச் செய்தி என பலரும் தெரியாமலே அதை பரப்பி உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை ஆன்லைன் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யவில்லை. ஆனால் ஒரு சிலர் பாஸ்போர்ட் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும் என செய்திகள் பதிந்தனர். அதை உண்மை என நம்பிய பலரும் தங்கள் வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் மூலம் இந்த செய்தியை மேலும் பதிந்துள்ளனர்.

இதைக் கண்ட தேர்தல் ஆணையம் இது போலிச் செய்தி என அறிவித்துள்ளது. அந்த செய்தியில் தேர்தல் ஆணையத்தின் லோகோ வும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இதை பலரும் போலி செய்தி என நம்பாமல் பதிந்துள்ளனர். இதை ஒட்டி தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷேபாலி சரண் டிவிட்டரில் இந்த போலி செய்தியின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார

அந்த பதிவில், “பல வாட்ஸ்அப் குழுக்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள போலிச் செய்தி பரவுவதாக ஆணையத்தின் கவனத்துக்கு வண்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயரை மட்டுமே ஆன்லைன் மூலம் பதிவு செய்துக் கொள்ள முடியும் என்பதை ஆணையம் இந்த பதிவு மூலம் விளக்குகிறது” என பதியப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: EC announcement, Online voting, WhatsApp fake messages
-=-