திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தும் புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகள் வைபை வசதி பெறும்.
கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தி தரும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
shcool
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, பள்ளிகளில் வைபை வசதி, இணையதள வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவில் உள்ள 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வைபை வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்க உள்ளது.
கேரள மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ந்தேதி அன்று இத்திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளில் வைபை மூலம் 2 எம்பி வேகத்தில் இணையசேவை பெற முடியும்.
அதே போல், 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் கூறுகையில்,
6007_wifi
‘‘ஆரம்ப பள்ளிகளில் டிஜிட்டல் வசதியை மேம்படுத்தவும், உயர்நிலை பள்ளிகளில் அதை விரிவாக்கம் செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது.
8 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சேவை வழங்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஆசிரியர் தினத்தன்று பேசிய முதல்வர் பினராயி விஜயன், சரவதிக்கு கோவிலுக்கு நிதியை அள்ளி கொடுங்கள் என்று தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.