பெல்கிரேட்: டென்னிஸ் பிரபலம் நோவக் ஜோகோவிக், கொரோனா வைரஸ் நோயாளி என்று பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றிய நான்காவது டென்னிஸ் வீரரானார் நோவக் ஜோகோவிக். அதேசமயம், இவர் அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தவில்லை. இவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், இவரின் மனைவி ஜெலினாவுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால், இவரின் குழந்தைகளுக்கு தொற்று எதுவும் இல்லை.

செர்பியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற டென்னிஸ் கண்காட்சியை இவர் ஒருங்கிணைத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வேறு டென்னிஸ் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். கொரோனா கோரத்தாண்டவம் ஆடக்கூடிய சூழலில், இவரின் இந்த செயல் தேவையற்றது என்று தற்போது விமர்சிக்கப்படுகிறது.

கிரிகோர் டிமிட்ரோவ், போர்னா கோரிக் மற்றும் விக்டோர் டிராய்க்கி ஆகிய மூவரும் ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்ட டென்னிஸ் நட்சத்திரங்கள்.