Random image

3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நோவக் ஜொகோவிக்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பட்டத்தை 3வது முறையாக செர்பியாவை சேர்ந்த நோவக் ஜொகோவிக் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதி சுற்றில் அர்ஜெண்டினாவின் ஜூவன் மார்டினை வீழ்த்தி ஜொகோவிக் வெற்றிப்பெற்றார்.

Djoko

கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜொகோவிக், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் ஜூவன் மார்டின் டெல் பட்ரோவை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜொகோவிக் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2வது செட்டையும் 7-6 என கைப்பற்றினார் ஜோகோவிக். அடுத்து தொடங்கிய 3வது செட்டில் 6-3 என எளிதாக அர்ஜெண்டினா வீராரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார் ஜொகோவிக். இதையடுத்து 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோவக் ஜோகோவிக் வென்று அசத்தியுள்ளார்.

இதற்கு முன்பாக 2011 மற்றும் 2015ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை ஜோகோவிக் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.