நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை:

வம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒம்எம்சிஏ திடலில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்  விடுத்துள்ள அறிக்கையில்,  தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்’கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 10-11-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை – ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில்  நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்  என்று அறிவித்து உள்ளார்.

இந்த கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், கழக ஆக்கப்பணிகள், கழக சட்ட திருத்தம், தணிக்கைகுழு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

ஏற்கனவே  செப்டம்பர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர்.10-ம் தேதி  திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி