சபரிமலை விவகாரத்தில் பாரதிய ஜனதா இரட்டை வேடம்: கேரளா அமைச்சர் சுனில்

திருவனந்தபுரம்:

பரிமலை அய்யப்பன் கோவில்  விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மாநில அமைச்சர் சுனில் கடுமையாக குற்றம் சாட்டினார்.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வரகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கில், மாநில கம்யூனிஸ்டு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கேரள அமைச்சர் சுனில்

ஆனால், மாநில எதிர்க்கட்சியான   காங்கிரஸ், பா.ஜனதா எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுனில், சபரிமலை விவகாரத்தில் பாரதிய ஜனதா இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார்.  சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க கோரி வழக்குப் போட்டது பாஜகதான் என்றவர்,  தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி பிரச்னை செய்ய முயற்சிக்கிறது. ஒருபுறம்,
பா.ஜனதாவுடன் தொடர்புடைய 5 வழக்கறிஞர்கள் ஒருபுறம் சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மறுபுறம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி பிரச்சனை செய்ய முயற்சிக்கிறது. பா.ஜனதா பிரச்சனையை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாக்க விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.