பூனைக்கு மணி கட்டுவது யார்? மூத்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்

டெல்லி:

ரியான தலைமை இல்லாமல் தள்ளாடும் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ள நிலையில், பூனைக்கு மணி கட்டுவது யார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது,  கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் டெல்லி சட்டமன்ற தோல்வி காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருக்கிறதா என்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல்காந்தி, தனக்கு மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பகிரங்கமாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார். இது மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க மூத்த தலைவர்கள் யாரும்  முன்வராத நிலையில், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 8 மாதங்களாக தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தவித்து வருகிறது.

விரைவில் கட்சித் தலைவரை  நியமனம்  செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உள்பட பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இதுவரை தகுதியான நபர் நியமனம் செய்யப்பட முயாமல் கட்சி தடுமாறி வருகிறது.

இந்த விவகாரம்,  காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாக  உள்ளது. மூத்த தலைவர்களிடையே நிலவி வரும் போட்டி மனப்பான்மை காரணமாக தலைவர் நியமனம் செய்யப்படுவது தாமதமாகி வருகிறது..  சரியான நபர் யாரையும் நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது… இதனால் கட்சித் தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தியுடன் உள்ளனர்.

இதுகுறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருரும், டெல்லி முன்னாள் முதல்வருமான மறைந்த ஷீலா தீட்சித்தின் மகன்  சந்தீப் தீட்சித், காங்கிரஸ் கட்சி மீதும், மூத்த தலைவர்கள் மீது  பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளர். காங்கிரஸ் கட்சி, புதிய தலைவரை கண்டுபிடிக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டியவர், பூனைக்கு மணி கட்டுவது யார்? என்றும் கேள்வி எழுப்பினார்….

காங்கிரசில் கட்சியை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் பலர் கட்சியில் உள்ளனர்  “குறைந்தது ஆறு முதல் எட்டு மூத்த தலை வர்கள் உள்ளனர். ஆனால், இவர்களின் குறிப்பிட்ட செயல்கள் கட்சியினரால் விமர்சிக்கப்படும்போது, அவர்கள் செயலற்றதாக இருக்க விரும்புகிறார்கள்… இவர்களின் நடவடிக்கைகள் தனக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளவர், அவர்கள் மேலே வர வேண்டும்…. மூத்த தலைவர்களில் பலர்  மக்களவை, மாநிலங்களை பதவிகளை வகித்து வருகினற்னர்… சிலர் முன்னாள் முதலமைச்சர்களாக இருந்தவர்கள், தற்போதைய சில முதல்வர்கள் கூட மிகவும் மூத்தவர்கள்தான், அவர்கள்  கட்சிக்கு வந்து வளர்ச்சிக்கு உதவ வேண்டும்… அதற்கான நேரம் இது என்று நான் நினைக்கிறேன் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான  அமரீந்தர் சிங், அசோக் கெஹ்லோட், கமல் நாத் இருக்கிறார்கள்… அவர்கள் ஏன் ஒன்றுகூடக்கூடாது  என்று குறிப்பிட்டவர்,  ஏ.கே. ஆண்டனி, ப.சிதம்பரம், சல்மான் (குர்ஷித்), அகமது படேல்… போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறப்பாக பணியாற்ற உள்ளார்கள்… அவர்களின்  அறிவார்ந்த பங்களிப்புக்கான நேரம் என்று நான் நினைக்கிறேன்… அவர்கள் மையத்திலோ அல்லது மாநிலங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ தலைமைத்துவத் தேர்வுக்கு செல்ல முடியும் என்றும் வலியுறுத்தினார்.

“தற்போதைய காங்கிரஸ் கட்சியின்  நிலை என்னவென்றால், மேடம் (சோனியா) காந்தி ஒரு இடைக்கால தலைவர்… அவரும் தலைவராக இருக்க விரும்பவில்லை… ராகுலும் தலைவராக இருக்க விரும்பவில்லை.. அவர்களுடைய  நிலைப்பாட்டை மதித்து சில மாதங்களாக சரியான தலைமையின்றி கட்சி இயங்கி வருகிறது… இது நீடிக்கக்கூடாது… கட்சிக்கு தலைமையேற்ற ராகுல்காந்தி திரும்பி வர வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

இதுபோன்ற நிகழ்வுகள் மாநில தலைமை விஷயத்திலும் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய தீட்சித்,  ஏற்கனவே அரியானாவில்  பூபிந்தர் சிங் ஹூடா, டெல்லியில் ஷீலா தீட்சித் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் மீண்டும் தலைமை பதவிகளுக்கு கொண்டு வரப்பட்டதை நினைவு கூர்ந்தவர், அதுபோல ராகுலும் கட்சித் தலைமை பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“கட்சி தனது நல்ல தலைவர்களைப் பயன்படுத்தாது என்பது இல்லை”, ஒரு தலைவர்மீது விரலை நீட்டி குற்றம் சாட்டுவது எளிதானது…  ஆனால் மீதமுள்ள தலைவர்கள்) என்ன செய்கிறார்கள்?இப்போது காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது அனைவரையும் ஒன்று சேர்ப்பது மற்றும்,  ஒருமித்த கருத்தை உருவாக்குவது … இதன் மூலம் புதிய காங்கிரஸ் தலைவரைப் பெற வேண்டும்…….

பல தலைவர்கள் ஊடகங்களில்  கட்டுரைகளை எழுதுகிறார்கள், புத்தகங்களை எழுதுகிறார்கள், மாநாடுகளிலும் கூட்டங்களிலும் முணுமுணுக்கிறார்கள் என்று விமர்சித்தவ்ர,  நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்து கட்சி வளர்ச்சிக்கு  தைரியம் கொடுக்க மனமில்லையா? ஏன் செயல்படவில்லை என்று தீட்சித் காட்டமாக கேள்வி எழுப்பியவர், பூனைகளுக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் தற்போது காங்கிரஸ் கட்சியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வி.

இவ்வாறு அவர் கூறினர்.