அரக்கோணம் மின்சார ரெயில் வேகம் அதிகரிப்பு : பயணிகள் மகிழ்ச்சி

சென்னை

சென்னையில் இருந்து அரக்கோணம் மின்சார ரெயில் வேகம் அதிகரித்ததால் விரைவு ரெயிலை விட விரைவாக செல்கிறது.

சென்னை – அரக்கோணம் மின்சார ரெயில்களின் வேகம் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க அதிகரிக்கப்பட்டுள்ளது.   அதனால் தற்போது இந்த ரெயில்கள் இதே வழியில் செல்லும் விரைவு ரெயில்களை விட விரைவாக செல்கிறது.

உதாரணமாக கோவை – சென்னை விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து சென்னை செண்டிரலை அடைய சுமார் 2 மனி நேரம் 15 நிமிடம் எடுத்துக் கொள்கிறது.   மின்சார ரெயில் இதே தூரத்தை 1 மணி 55 நிமிடத்தில் சென்று அடைகிறது.

இதனால் மின்சார ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.