கொச்சி:

கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் கொரோனா ஸ்கிரினிங் டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த சோதனை தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில்,  கேரளாவில் 3 வயது சிறுவனை கொரோனா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த மூன்று வயது குழந்தை பெற்றோர்களுடன் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு, கடந்த மார்ச் 7 ஆம் தேதி கொச்சி திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்ததால், குழந்தை மற்றும் பெற்றோர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி குட்டப்பன் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் இரானில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (சியால்) உள்நாட்டு வருகை பயணிகளுக்கும் உலகளாவிய திரையிடலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு கேள்விகள் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களுடன் உதவ புதிய சுகாதார கவுண்டர்களையும் சியால் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெப்ப ஸ்கிரீனிங் செயல்முறை இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, அங்கு கதிர்வீச்சின் அளவைக் கண்டறிகிறது. ஏற்கனவே கொரோனா  பாதிக்கப்படக்கூடிய 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மட்டுமே ஸ்கிரீனிங் செய்யப்பட்டது, ஆனால் மார்ச் 4 முதல் அனைத்து பயணிகளும் ஸ்கிரீனிங் செய்ய வேண்டியிருந்தது. நாட்டின் 21 விமான நிலையங்களில் வெப்ப சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன.