பேங்காக்: கொரோனா காரணமாக, உலகளாவிய அளவில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள விமான உணவகம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், விமானத்தில் பறந்துகொண்டே உண்ணும் அனுபவத்தைப் பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதன்பொருட்டு, சில விமானங்கள் உணவகங்களாக மாற்றப்படுகின்றன. விமானப் பணிப்பெண் வேடமணிந்த பெண்கள், இந்த உணவகங்களில் சர்வர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த விமான உணவகங்களில் உண்ணுவதோடு சேர்த்து, காக்பிட்டிலும் சென்று பார்க்கலாம்.

உண்மையாகவே பறப்பதைப் போன்ற அனுபவத்தைப் பெற, வாடிக்கையாளர்களுக்கு ‘போர்டிங் பாஸ்’களும் வழங்கப்படுகிறது.

ஒரு விமான உணவகம், அந்நாட்டின் கடற்கரை நகரமான பட்டாயாவிலும், மற்றொரு விமான உணவகம் பாங்காக்கிலும் அமைந்துள்ளது. இவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், ‘ரன்வே1’ என்ற பெயரில், ஏர்பஸ் A320 என்ற விமானம், இந்தியாவில் விமான உணவகமாக மாற்றப்பட்டு, அந்த உணவகம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.