லக்னோ,

உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் அனுமதியில்லாமல் நடத்தப்படும் பசுவதைக்கூடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஒருவார காலமாக ஆடு கோழி மீன் மற்றும் மாட்டு இறைச்சி கடைகளை குறிவைத்து தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

அனுமதியில்லாமல் நடத்தப்படுவதாககூறி லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான கடைகள் முதல், நூறுபேர் வேலை செய்யும் பெரிய கடைகள் வரை மூடப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

இறைச்சிக்கடை நடத்துவோரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்தச் சூழலில்.  ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர்தாஸ் நேற்றுமுதல் மூன்றுநாள் அதாவது 72 மணி நேரம் அனுமதியில்லாத பசுவதைக்கூடங்களுக்குத் தடைவிதித்துள்ளார். இதுதொடர்பான அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது  பொதுமக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.