மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், பிரதமர் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக  முஹைதீன் யாசின் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றிபெறுவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால், யாசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும், அவரது அமைச்சரவை அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரை நீடிக்கும் என்றும், இப்போது, ​​அவர்கள் வென்றிருக்கிறார்கள்.” என்றும் முன்னாள் பிரதமர்  மகாதீர் முகமது  தெரிவித்து உள்ளார்.

மலேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ந்த அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சி (பெர்சத்து) செயல் தலைவர் முகைதீன் யாசின் அந்நாட்டின் எட்டாவது பிரதமராக மன்னரால் நியமிக்கப்பட்டார்.

இதற்கு  முன்னாள் பிரதமர் மகாதீர் முகமமதின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.  இது தொடர்பாக மாமன்னரிடம் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தேசிய அரண்மனையை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை,” என்று கூறியவர்,  “இங்கு நடந்திருக்கும் நிகழ்வு மிகவும் விசித்திர மான ஒன்று. கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது ஆட்சி அமைக்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போதைய பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடு விடுக்கப்போவதாக தெரிவித்தவர்,  “புதிய பிரதமருக்கு ஆதரவு உண்டா இல்லையா என்பதை எம்.பி.க்களே முடிவு செய்யட்டும். அவர்களின் முடிவே அதிகாரபூர்வ முடிவு,” என்று  தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து முகைதீன் யாசின் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த நிலையில் முதன்முதலாக ஊடகம் ஒன்று பிரத்யேக பேட்டியளித்த மகாதீர், முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடையும், “இந்த அமைச்சரவை)அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தவர் முன்னாள் பிரதமர் டத்துக் செரி நஜிப் ரசாக் என்றும் குற்றம் சாட்டியவர்,  “இப்போது அவர் ஆதரவு முஹைதீன் அரசாங்கமாக உள்ளது. இந்த அரசு,  எனது ஆதரவாளர்கள் பலருக்கு வெகுமதி அளித்துள்ளனர். இதனால், எனது ஆதரவாளர் களாக இருந்தவர்களில் சிலர் இப்போது புதிய அரசின்  அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அந்த பக்கத்திற்கு நகர்ந்துள்ளனர்.

எங்களது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், அதாவது 114 இடங்களுக்கு மேல் இருந்தது, ஆனால் இப்போது அது குறைவாகிவிட்டது. இதனால் முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தினாலும் அது தோல்வியைதான் சந்திக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய பிரதமர் முஹைதீன், தனது  22 மாதங்கள் ஆட்சியின்போது,  எங்கள் முன் வைத்த கொள்கைகளைத் தொடருவார் என்று நம்புகிறேன், “நாங்கள் உருவாக்கிய நல்ல கொள்கைகளை அமைச்சரவை கைவிட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியவர், தனது ஆட்சியின்போது, கொண்டு வரப்பட்ட  பகிரப்பட்ட செழிப்பு பார்வை 2030 தொடரும் என்று நம்புவதாக தெரிவித்தார், இது ஒரு நல்ல கொள்கை என்றவர் இதை உருவாக்கிய அமைச்சர் தற்போது, யாஷினின் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

தனது ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னணியில் செயல்பட்டவர் நஜிப் குற்றம் சாட்டியவர்,  “உண்மையான சதிகாரன் நஜிப்தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால்,  அவர்  மலாய் முஸ்லீம் அரசாங்கத்தை உருவாக்கி நினைத்தால், இதனால்  அவருக்கு மலாய்க்காரர்களிடமிருந்து கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவர் தோல்வி அடைந்தார்  நாங்கள் வெற்றி பெற்றோம். “இப்போது, ​​அவர்கள் வென்றிருக்கிறார்கள்.”

இவ்வாறு மகாதீர் முகமது கூறினார்.