பெண்களுக்கு இப்போது தான் தைரியம் வந்துள்ளது : சின்மயி

சென்னை

பாலியல் சீண்டல் பற்றி வெளிப்படையாக புகார் அளிக்க பெண்களுக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளதாக பாடகி சின்மயி கூறி உள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது வலை தளங்களில் பல பிரபலமான பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். # மீ டூ என்னும் அந்த பதிவுகள் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. அந்த சர்ச்சைகள் தற்போது தமிழ்நாட்டுக்கும் பரவி உள்ளன. பாடகி சின்மயி தன்னை கவிஞர் வைரமுத்து கடந்த 2005 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக அணுகியதாக குற்றம் சாட்டி இருந்தார்

இந்த பதிவு பரபரப்பை உண்டாக்கிய நேரத்தில் மேலும் பல #மீ டூ பதிவுகளை சின்மயி தனது டிவிட்டரில் பகிர ஆரம்பித்துள்ளார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாள்ர்களை சின்மயி சந்த்த்த போது, “இது போன்ற பாலியல் சீண்டல்கள் பலவருடங்களாக நடந்த வருகின்றன. இது எல்லா இல்லங்களிலும் நடண்டு வருகின்றன. இதுவரை பெண்கள் அது குறித்து சொல்லாமல் இருந்த நிலையில் #மீ டு ஹேஷ்டாக் மூலம் இதை வெளியில் சொல்ல பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது.

என் சக பாடகிகள் பலரும் இதே போன்ற கொடுமையை அனுபவித்துள்ளனர். ஆயினும் அவர்கள் ஒரு சில கட்டுப்பாடுகள் காரணமாக இது குறித்து பேசுவதில்லை. அதே நேரத்தில் என்னிடம் தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை தெரிவித்துள்ளனர். நான் விளம்பரத்துக்காக வைரமுத்து மீது குற்றம் சாட்டியதாக சொல்வது தவறு. நான் தமிழ் உட்பட 8 மொழிகளில் பாடி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களையும் நன்றாகவே பாடி இருக்கிறேன். அத்துடன் டப்பிங் பேசி இருக்கிறேன்.

இந்த குற்றச்சாட்டை வைத்து நான் விளம்பரம் தேடும் நிலையில் இல்லை. அத்துடன் இதனால் எனக்கு திரையில் பாடும் வாய்ப்புக்கள் குறைந்தாலும் கவலை இல்லை. எனது குரலை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன். பலர் எனது புகாருக்கு ஆதாரங்கள் கேட்கின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த அளவுக்கு வீடியோ தொழில் நுடம் இருந்ததா? அல்லது நான் எப்போதும் ஒரு காமிராவுடன் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? எனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வைரமுத்து மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

You may have missed