Random image

குஜராத் வங்கிகளின் வாராக்கடன் ரூ. 37342 கோடியாக உயர்வு

கமதாபாத்

டந்த 2017 ஆம் வருடம் ஜுன் மாதம் குஜராத் வங்கிகளில் ரூ. 35342 கோடியாக இருந்த வாராக்கடன் தற்போது ரூ. 37342 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கிகளில் வருடா வருடம் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.  வாராக்கடன்களின் விவரங்கள் குறித்து அகமதாபாத் நகரில் மாநில அளவிலான வங்கிகள் கூட்ட அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்ப்ட்டது.   இந்தக் கூட்டத்தில் அனைத்து தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் கலந்துக் கொண்டன.

இந்த அறிக்கையில், “கடந்த 2017ஆம் வருடம் குஜாராத் மாநில வங்கிகளின் வாராக்கடன்கள் மொத்தம் ரூ. 35342 ஆக இருந்தது.   அது ஒரே வருடத்தில் ரூ. 2000 கோடி உயர்ந்து ரூ. 37342 கோடி ஆகி உள்ளது.  அதாவது 5.7% அளவுக்கு வாராக்கடன்கள் அதிகரித்துள்ளன.  இதற்கு முந்தைய வருடத்தில் இந்த வளர்ச்சி 7.4% ஆகவும் அதற்கும் முந்தைய வருடத்தில் 6.84% ஆகவும் இருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனா வங்கியின் தலைமை அதிகாரி ரமேஷ் சிங், “நாட்டின் வாராக்கடன் 11% அதிகரித்துள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் 5.7% மட்டுமே அதிகரித்துள்ளது.  பெரிய கடன் பெற்றவர்களின் வாராக் கடன் அதிக அளவில் குறைந்துள்ளன.     தற்போதுள்ள இந்த வாராக்கடன்கள் அனைத்தும் சிறு கடன் பெற்றவர்களுடையதாகும்.    இதற்கு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி எஸ் டி அமலாக்கமே ஆகும்” என தெரிவித்துள்ளார்.