சென்னை:

மிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் இன்று தொடங்கி உள்ள நிலையில், என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி  திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்  சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றம் இன்று கூடியதும், ஜீரோ அவரின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,  தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்) எதிராக பாஜக ஆதரவு கட்சி ஆட்சி செய்து வரும், பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பாஜக கூட்டணி கட்சிகளே என்பிஆருக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, தமிழக சட்டமன்றத்தில்,  என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், வரும் 1ந்தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்க உள்ளதால், இது குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது என்று கூறியவர், இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார்,  “ மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை” என்றார்.   மேலும், என்.பி.ஆர்-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.