வீட்டுக்கு வீடு இலவச வாஷிங்மெஷின்!   மதுவிலக்கு இல்லை: என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

a

புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வரும் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து  ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இன்று மாலை தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அந்த அறிக்கையில் மக்களைக் கவரும் சில திட்டங்கள் உள்ளன.

மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும், 10 கி.லோ இலவச அரிசி, 20 கிலோவாக அதிகரிக்கப்படும். . புதுச்சேரிக்கு, யூனியன் பிரதேசம் என்ற நிலையில் இருந்து மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். உள்ளூர் பேருந்து கட்டணம் அதிகபட்சம் ரூ.5 என்ற அளவில் இருக்கும்.  மருத்துவ படிப்பு உதவி தொகை 4 லட்சமாக உயர்த்தப்படும். விவசாய கடனுக்கான வட்டியை அரசு செலுத்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வாஷிங்மெஷின் இலவசமாக அளிக்கப்படும்”  என்று குறிப்பிடப்பட்டுளளது.

அதே நேரத்தில்,. புதுச்சேரியில் மது விலக்கு அமல்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: election 2016, Election Manifesto, NR Congress, என்.ஆர்.காங்கிரஸ், தேர்தல் 2016, தேர்தல் அறிக்கை
-=-