புதுச்சேரி : என் ஆர் காங்கிரஸ் எம் எல் ஏ தகுதி நீக்கம்

--

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற் உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அசோக் ஆனந்தின் தந்தை ஆனந்தன் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணி ஆற்றியவர். தனியார் பள்ளி ஒன்று இவர்களுக்கு சொந்தமாக உள்ளது.

தலைமைப் பொறியாளராக ஆனந்தன் பதவி வகித்த போது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து ஆனந்தன் மற்றும் அவர் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான அசோக் ஆனந்த் ஆகிய இருவர் மீதும் சிபிஐ விசாரண்ஐ நடத்தியது.

புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் இருவருக்கும் தலா ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. அத்துடன் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ.1.57 கோடி சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதை ஒட்டி என் ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.