Random image

என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால் ஐதராபாதில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்படலாம்: அதிர்ச்சி தகவல்

ஐதராபாத்: என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், ஐதராபாதில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.5 லட்சம் பேர் தங்கள் தேசிய குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போகலாம். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டால் ஐதராபாத் மொத்த மக்கள் தொகையில் 39.4 லட்சம் பேரில் 27 சதவீதம் பேர் கல்வியறிவு அற்றவர்கள்.

எனவே, என்ஆர்சிக்கான ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்பது குறைவே. இந்த அனுமானத்தின் அடிப்படையில் 20.46 லட்சம் பேரில் 5.05 லட்சம் மக்கள் இந்துக்கள் ஆவர்.

17.13 லட்சத்தில் 5.02 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் என்ஆர்சி பட்டியலில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணரும், ஆராய்ச்சியாளருமான காலித் சைபுல்லா கணித்துள்ளார்.

தெலுங்கானாவில் 1.26 கோடி இந்துக்களும், 14.91 லட்சம் இஸ்லாமியர்கள் என்ஆர்சி பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியாமல் போகலாம். ஆந்திராவில் 1.79 கோடி இந்துக்கள், 14.05  லட்சம் இஸ்லாமியர்கள் பட்டியலில் இருந்து விலக்கப்படலாம் எனறும் அவர் கணித்துள்ளார்.

கல்வியறிவு இல்லாதவர்கள் தங்கள் பிறந்த தேதியை நினைவில் வைத்துக் கொள்ளாதபோது, ​​பெற்றோரின் பிறந்த தேதியை அவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.