அசாம் குடிமக்கள் பதிவேடு சர்ச்சை: யாரும் பீதி அடைய வேண்டாம்! ராஜ்நாத் சிங்

டில்லி:
சாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டு, இதுகுறித்து பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்ற ராஜ்ய சபையில் விளக்கம் அளித்துள்ளார்.

அசாமில் வங்கதேச அகதிகள் ஏராளமானோர் குடியேறி உள்ளனர். இதன் காரணமாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத்தொடர்ந்து, அசாம் மாநிலத்தில்வ தேசிய குடிமக்கள் பதிவேட்டை  உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  மாநில அரசு தயாரித்து உள்ளது. அதன் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்து ராஜ்சபாவும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது.

ஒரு சிலர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” என்றார்.

You may have missed