என்.ஆர்.ஐ. திருமணங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்

டெல்லி:
இந்தியர் அல்லாதவர்களின் திருமணங்களை(என்.ஆர்.ஐ)ஏழு நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் ஏழுநாட்களுக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு பதிவு செய்யவில்லை எனில் அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
nri marriage
கடந்த புதன் கிழமை மேனகா காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சட்ட அமைச்சர் ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு திருமண பதிவு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஏழு நாட்களுக்குள் என்.ஆர்.ஐ. திருமணங்களை பதிவு செய்ய வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

என்.ஆர்.ஐ. திருமணங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருமணமாகி சில நாட்களில் தங்கள் கணவர் அல்லது மனைவியை விட்டு சென்றுவிட்டால் அவர்களின் சொத்துக்களை முடக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் குற்றவியல் நடைமுறை, திருமண சட்டம் மற்றும் பாஸ்போர்ட் மீதான சட்டங்களில் மாறுதல்களை செய்ய வேண்டுமென சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த சட்ட மசோதக்களை தயாரிக்கும் படி அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். தற்போது இந்தியாவில் திருமணங்களை பதிவு செய்வதற்கான நேரங்கள் மிக குறைவாக உள்ளது. எனவே சட்டக்குழு அறிக்கை நடந்து முடிந்த திருமணங்களை பதிவு செய்ய 30 நாட்களுக்கு காலக்கெடு அளித்துள்ளது. அதனை மீறும் பட்சத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.5 தண்டனை தொகையாக வசூலிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு, உள்துறைை மற்றும் சட்டத்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த நோடல் ஏஜென்சியை அமைத்துள்ளது. இந்த ஏஜென்சி இந்தியாவில் குடியிருப்போர் அல்லாதவர்களின் திருமண தகவல்கள் மற்றும் வெளிநாடு செல்லும் அல்லது திரும்பும் நபர்களின் தகவல்களை அவ்வபோது கணித்து சுற்றறிக்கையை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.